ADDED : மார் 15, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாண்டியா: பைக் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மாண்டியா, மலவள்ளி தாலுகா, குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷில்பா, 39. இவருக்கு 7 வயது, 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தன் குழந்தைகளை பள்ளி முடிந்து, வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்து இருந்தார்.
வழக்கம் போல நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, தன் இரண்டு குழந்தைகளையும் பைக்கில் ஷில்பா அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்திசையில் வந்த கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஷில்பா உயிரிழந்தார்.
பலத்த காயம் அடைந்த இரண்டு குழந்தைகளும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலவள்ளி கிராமப்புற போலீசார் விசாரிக்கின்றனர்.