ADDED : செப் 20, 2024 10:20 PM

பாலக்காடு : பாலக்காடு அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் சென்றவர் இறந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தோணி உம்மிணி பகுதியைச் சேர்ந்தவர், அனில்குமார், 24. இவர், பாலக்காட்டில் உள்ள தனியார் நிறுவன பிரின்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, 1:45 மணிக்கு, திருச்சூரில் இருந்து, பைக்கில் வீட்டுக்கு வந்தார். திரும்பி வரும் வழியில், திருச்சூர் -- -பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், வடக்கஞ்சேரி மேம்பாலத்தில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த அனில்குமாரை வடக்கஞ்சேரி போலீசார் மீட்டு, திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.