உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 18, 2026 12:43 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கடந்த, 15ம் தேதி இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை ஏராளமானோர் கொண்டாடினர். மத்திய டில்லி பழைய ராஜேந்தர் நகரின் பரபரப்பான படா பஜார் சாலையில் இரவு 11:30 மணிக்கு ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்து இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடினார்.
வாலிபரின் இந்தச் செயலை பொதுமக்கள் கண்டித்தனர்.
ப ழைய ராஜேந்தர் நகரைச் சேர்ந்த மோஹித் சர்மா என்பது விசாரணையில் தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார் மோஹித்தை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
