ADDED : செப் 08, 2025 01:40 AM

புதுடில்லி:வாகன திருட்டுக் கும்பலில், ஆறு சிறுவர்களை கைது செய்த போலீசார், 22 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
வடக்கு டில்லி சாஸ்திரி நகர், இந்தர்லோக் ஆகிய பகுதிகளில் இரவு நேர வாகன சோதனையின் போது, திருட்டு பைக்குகளில் வந்த ஆறு சிறுவர்கள் கைது செய்யப் பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராம் திவாரி என்பவர் தலைமையில் பைக் மற்றும் வாகனங்களை அதிகாலை நேரத்தில் திருடி வருவதை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த, 10 பைக்குகள், 12 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், திருடப்பட்ட பைக்குகளைப் பயன்படுத்தி, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு உள்ள ஆறு சிறுவர்களுமே, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்.
அவர்களின் இந்தப் பழக்கத்தை ராம் திவாரி தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்து உள்ளார்.
ராம் திவாரியையும் அவரது கும்பலைச் சேர்ந்த மற்ற சிறுவர்களையும், தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.