உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 23, 2026 07:22 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி:கிழக்கு டில்லியின் விகாஸ் மார்க் பகுதியில் மதியம் நிகழ்ந்த வாகன விபத்தில், மனைவி மற்றும் இரு குழந்தைகள் கண் எதிரே, 35 வயதான நபர் இறந்தார்.
கீதா காலனி என்ற இடத்தின் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. நொய்டாவைச் சேர்ந்த சச்சின் குலாதி என்பவர் ஓட்டி சென்ற கார், இரு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் தன் இரு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த நீரஜ் என்பவர் மீது மோதியது.
இதில், 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர், தன் மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்பே இறந்தார். இதை அறிந்த போலீசார், அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த நீரஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் ஒருவர் இறந்ததை அடுத்து, சச்சின் குலாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
