பிறப்பு, இருப்பிட சான்றிதழே குடியுரிமைக்கான சான்று
பிறப்பு, இருப்பிட சான்றிதழே குடியுரிமைக்கான சான்று
ADDED : மே 01, 2025 06:17 AM

புதுடில்லி : இந்திய குடியுரிமைக்கான சான்றாக பிறப்பு, இருப்பிட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில், அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக வசித்தவர்களை கண்டறிந்து கைது செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
விசாரணையில், அவர்களிடம் ஆதார், பான், ரேஷன் கார்டுகள் இருந்தது தெரிய வந்தது. இந்திய குடியுரிமைக்கான சான்றாக, பிறப்பு மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார், பான், ரேஷன் கார்டுகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மட்டுமே பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு வசிப்பிடத்திற்கான சான்றாகக் கருதப்படுகிறது. ஆனால் குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படுவதில்லை. பான், ரேஷன் கார்டுகளுக்கும் இது பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.