கர்நாடக முதல்வர் நிகழ்ச்சியில் பா.ஜ., – எம்.எல்.ஏ., ஆவேசம்
கர்நாடக முதல்வர் நிகழ்ச்சியில் பா.ஜ., – எம்.எல்.ஏ., ஆவேசம்
ADDED : செப் 19, 2026 07:04 PM
ஷிவமொக்கா: கர்நாடக முதல்வர் சிவக்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில்: கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில், மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் குறித்து கஸ்துாரி ரங்கன் அறிக்கை தொடர்பாக, பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் சிவகுமார், பா.ஜ., – காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், மாநில கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின், வந்தே மாதரம் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்பட்டது.
இப்பாடல் முடிந்ததும், மேடையில் இருந்த பா.ஜ., – எம்.எல்.ஏ., சன்னபசப்பா, மைக் அருகில் வந்து, ‘‘முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். அவர், பல நல்ல பணிகளை செய்து வருகிறார். ஆனால் எங்கள் உணர்வுகளை புண்படுத்த, அரசு முயற்சிக்கும்போது அது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
‘‘வந்தே மாதரம் இரண்டு பத்திகள் மட்டும் பாட வேண்டும் என்ற உங்கள் முடிவு, மாநில மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வந்தே மாதரம் முழு பாடலும் பாட வேண்டும் என்பதே என் கோரிக்கை. தயவு செய்து, வந்தே மாதரத்தை முழுமையாக பாட வாய்ப்பு கொடுங்கள்,’’ என்றார்.
இவர் பேசிக் கொண்டிருக்கும்போது காங்கிரசை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். மேடையில் இருந்த சிலரும், அவரை சூழ்ந்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, சன்னபசப்பாவின் முதுகில் தட்டி கொடுத்த முதல்வர் சிவக்குமார், அவரை அமர சொன்னார். இதையடுத்து, சலசலப்பு அடங்கியது.
–––––––––––––––
20_DMR_0001
மேடையில் சன்னபசப்பா பேசும் போது அவரை சூழ்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்.
