மருத்துவமனையில் 81 நாட்கள் பா.ஜ., - எம்.எல்.ஏ., உருக்கம்
மருத்துவமனையில் 81 நாட்கள் பா.ஜ., - எம்.எல்.ஏ., உருக்கம்
ADDED : நவ 09, 2024 11:20 PM

பெங்களூரு: உடல் நிலை பாதிப்பால், 81 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக, முகநுால் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவு:
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த நான், 81 நாட்களுக்குப் பின், வீடு திரும்பி உள்ளேன். நான் வீட்டுக்கு வந்ததும், என் தாயின் முகத்தில் தென்பட்ட உணர்வை பார்த்து, என் கண்களில் கண்ணீர் வந்தது.
அவசர சூழ்நிலையின்போது, 15 மாதங்கள் நான் சிறையில் இருந்தேன். அதன்பின் நீண்ட நாட்களாக வீட்டை விட்டு, விலகி இருந்தது இல்லை. இப்போது 81 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சிக்குன் குனியாவால் வலியை அனுபவித்தேன்.
டாக்டர்கள் அளித்த சிறந்த சிகிச்சை, என்னை அக்கறையுடன் பார்த்துக் கொண்ட என் குடும்பம், என் ஆரோக்கியம் மேம்பட பிரார்த்தனை, பல்வேறு கோவில்களில் என் பெயரில் பூஜை செய்த தொண்டர்கள், நலம் விரும்பிகள், எனக்கு மறுஜென்மம் கொடுத்துள்ளனர்.
உண்மையில் எனக்கு மறு பிறப்பு. என்னை ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இன்னும் சில நாட்களில், இயல்பு நிலைக்கு திரும்புவேன். தொகுதி பணிகளை கவனிப்பேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.