தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் பா.ஜ., ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் பா.ஜ., ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : ஜன 11, 2025 08:24 PM
புதுடில்லி:'போலி வாக்காளர் பதிவு விண்ணப்பங்கள் சமர்ப்பித்து, தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற பா.ஜ., முயற்சிக்கிறது' என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பா.ஜ., தலைவர்களின் வீட்டு முகவரிகளைப் பயன்படுத்தி ஏராளமான போலி வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி ஜனநாயகத்தை நம்பாமல் குறுக்கு வழியை மட்டுமே யோசிக்கிறது.
போலி வாக்காளர் விண்ணப்பங்களில் மத்திய அமைச்சர்கள் உட்பட பா.ஜ., தலைவர்களின் முகவரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக பா.ஜ., தலைவர்கள் தேர்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் நேர்மையை பா.ஜ., குறைத்து மதிப்பிடுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி சட்டசபைத் தேர்தல், பிப்., 5-ம் தேதி நடக்கிறது.

