UPDATED : மே 23, 2024 11:53 AM
ADDED : மே 23, 2024 11:43 AM

புதுடில்லி: பிரதமர் மோடி 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பிரதமர் மோடி மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்க போகிறார். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வருகிறது. நிலையான மற்றும் உறுதியான அரசு அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியை மக்கள் பார்த்துள்ளனர்.
நீண்ட வரிசை
பிரதமரின் முன்னெடுப்புகளை பார்த்த மக்கள், பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என முடிவு செய்துள்ளனர். மக்களின் எண்ணம் தெளிவாக உள்ளது. பெண்களும், இளைஞர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களினால் பலன்பெற்றுள்ளதை பெண்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

