செப்., 9ல் துணை ஜனாதிபதி தேர்தல் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
செப்., 9ல் துணை ஜனாதிபதி தேர்தல் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
UPDATED : ஆக 02, 2025 08:41 AM
ADDED : ஆக 02, 2025 06:53 AM
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய, செப்., 9ல் தேர்தல் நடக்கிறது. அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது. நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆக., 11ல் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, கடந்த மாதம் 21ல், உடல் நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார்.
மூன்றாவது நபர் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதால் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணிகளை முடுக்கி விட்ட தலைமை தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா பொதுச் செயலர் பி.சி.மோடியை நியமித்தது.
நாட்டின் வரலாற்றில், பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே ராஜினாமா செய்த மூன்றாவது துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆவார்.
இதற்கு முன், துணை ஜனாதிபதிகளாக இருந்த வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்ததால் ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், செப்., 9ம் தேதி காலை 10:00 - மாலை 5:00 மணி வரை நடக்கும் என்றும், அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.
நான்கு முறை மட்டும் ஆக., 7ல் வேட்புமனு தாக்கல் துவங்கும் என்றும், அதற்கு கடைசி நாள் ஆக., 21 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது .
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால், நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலில் போட்டியிட பலர் வேட்புமனு தாக்கல் செய்தாலும், பரிசீலனையில் ஒருவரது மனு மட்டுமே ஏற்கப்பட்டால், அவர் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப் படுவார்.
இதுவரை நடந்த 16 துணை ஜனாதிபதி தேர்தல்களில், நான்கு முறை மட்டுமே வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.
- நமது சிறப்பு நிருபர் -