sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மஹா., மாநகராட்சி தேர்தலில் 68 இடங்களில் பா.ஜ., கூட்டணி போட்டியின்றி வெற்றி

/

 மஹா., மாநகராட்சி தேர்தலில் 68 இடங்களில் பா.ஜ., கூட்டணி போட்டியின்றி வெற்றி

 மஹா., மாநகராட்சி தேர்தலில் 68 இடங்களில் பா.ஜ., கூட்டணி போட்டியின்றி வெற்றி

 மஹா., மாநகராட்சி தேர்தலில் 68 இடங்களில் பா.ஜ., கூட்டணி போட்டியின்றி வெற்றி

5


ADDED : ஜன 04, 2026 01:33 AM

Google News

ADDED : ஜன 04, 2026 01:33 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., தலைமையிலான, 'மஹாயுதி' கூட்டணி 68 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளன. இதில், 44 இடங்களில் பா.ஜ., 22 இடங்களில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் இரு இடங்களில் துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., கட்சிகள் வென்றுள்ளன.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மஹாயுதி கூட் டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது .

எ திர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் அடங்கிய 'மஹா விகாஸ் அகாடி' கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றிருந்தது.

ஆசியாவிலேயே பணக்கார மாநக ராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ல் தேர்தல் நடக்கிறது. அதை தொடர்ந்து, 16ல் ஓட்டுகள் எ ண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் முடிவடைந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி, நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாளில், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பலர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, மும்பை உட்பட 29 மாநகராட்சிகளில், 68 இடங்களில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ தில், 44 இடங்களில் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகிஉள்ளனர்.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா சார்பில் 22 வேட்பாளர்களும், மற்றொரு துணை முதல்வரான அஜித் பவாரின் தேசியவாத காங்., சார்பில் இரு வேட்பாளர்களும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பண பலம், அதிகார பலத்தால் எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஆளும் பா.ஜ., அரசு மிரட்டி தேர்தலில் இருந்து வாபஸ் பெற வைத்ததாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றஞ் சாட்டியுள்ளார்.

வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு மாலை 3:00 மணிக்கு முடிவடைந்த போதும், நள்ளிரவு வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.






      Dinamalar
      Follow us