ADDED : மார் 03, 2024 06:58 AM
தட்சிண கன்னடா: ''பா.ஜ.,வின் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ள யாராக இருந்தாலும் கட்சியில் இணையலாம். அருண் குமார் புட்டிலாவும் இணையலாம்,'' என, மாவட்ட பா.ஜ., தலைவர் சதீஷ் கும்பாலா அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
சில நாட்களுக்கு முன்பு, அருண் குமார் புட்டிலா எங்களை அணுகினார். பா.ஜ., தேசிய கட்சி. எங்களுக்கென தனி கொள்கைகள் உள்ளன. அருண் குமார் புட்டிலா இணைவதை பா.ஜ., எதிர்க்கவில்லை. இது தொடர்பாக ஏற்கனவே அவரிடம் பேசியுள்ளோம். அவர் அதிகாரப்பூர்வமான உறுப்பினரானால், முக்கிய முடிவு எடுக்கப்படும்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, அருண்குமார் புட்டிலாவுடன் தனிப்பட்ட முறையில் பேசி உள்ளார். பா.ஜ.,வில் இணையும்படியும் கூறினோம். ஆனால் அவர் சேர விரும்பவில்லை. இணையாததற்கான காரணத்தை அவர் தான் விளக்க வேண்டும்.
பா.ஜ.,வில் இணையாமல் சுயேச்சையாக போட்டியிடுவாரா என்பது எங்களுக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

