UPDATED : மே 10, 2024 08:18 PM
ADDED : மே 10, 2024 08:07 PM

புதுடில்லி
;உத்தர பிரதேசத்தில், வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிய 15
நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், பா.ஜ., வேட்பாளர் சஷாங்க் மணி
திரிபாதி, 54, ஓட்டமாக ஓடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
உத்தர
பிரதேசத்தின் தியோரியா லோக்சபா தொகுதிக்கு கடைசி கட்டமான ஜூன் 1ம்
தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்
செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியுடன்
நிறைவடைந்தது.
பா.ஜ., சார்பில், சஷாங்க் மணி திரிபாதி
முதல்முறையாக போட்டியிடுகிறார். மூன்றாம் தலைமுறை
அரசியல்வாதியான இவர், ஐ.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம்
பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடைசி நாளன்று
வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிய 15 நிமிடங்களே இருந்த நிலையில்
விரைந்து வந்த சஷாங்க், 100 மீட்டர் துாரத்துக்கு ஓட்டமும் நடையுமாக
வேர்க்க விறுவிறுக்க வந்து கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல்
செய்தார்.அவருடன், உ.பி., மாநில பா.ஜ., தலைவர் பூபேந்தர்
சிங்கும் ஓடி வந்தார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை அங்கு சில
நிமிடங்களுக்கு பரபரப்பு நிலவியது.