தேர்தல் வெற்றியை மதுவிருந்துடன் கொண்டாடியதாக பா.ஜ. எம்.பி. மீது புகார்
தேர்தல் வெற்றியை மதுவிருந்துடன் கொண்டாடியதாக பா.ஜ. எம்.பி. மீது புகார்
UPDATED : ஜூலை 08, 2024 10:20 PM
ADDED : ஜூலை 08, 2024 10:16 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தல் வெற்றியை மதுபாட்டில், அசைவ உணவுடன் விருந்து வைத்து பா.ஜ. எம்.பி. கொண்டாடிய சம்பவம் பெங்களூருவில் நடந்ததாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் சிக்கபெல்லாபூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு சுதாகர் வெற்றி பெற்றார்.வெற்றியை கொண்டாட இன்று நீலமங்களா என்ற இடத்தில் பங்கேற்ற தன் ஆதரவளாளர்களுக்கு மதுபாட்டிலுடன் கறிவிருந்து வைத்தார்.
மதுபாட்டிலை வாங்கிய நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது போன்ற கொண்டாட்டத்திற்கு போலீஸ் அனுமதி வாங்காமல் நடந்துள்ளதாக ஆளும் காங்., குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து சுதாகர் எம்.பி.யிடம் கேட்டதற்கு நடந்த விழாவுக்கும் இதுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.