ADDED : ஜன 08, 2026 12:13 AM

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை முடிவுக்கு கொண்டு வரவே, புதிய வேலை உறுதி சட்டத்தை மத்திய பா.ஜ., அரசு நிறைவேற்றி உள்ளது. பெயரை மாற்றுவது அல்ல, அனைவரும் 'ராம் ராம்' என சொல்ல வேண்டும் என்பதே அக்கட்சியின் நோக்கம். நாட்டு மக்கள் நன்றாக இருப்பது பா.ஜ.,வுக்கு பிடிக்கவில்லை.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி
கனவுலகில் ஒமர்!
ஜம்மு - காஷ்மீர் மக்களின் நலன் குறித்த விவகாரத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா மவுனம் காக்கிறார். அதே சமயம், எங்களது கட்சியை மட்டும் வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறார். அவதுாறு செய்வதில் காட்டும் ஆர்வத்தை, வளர்ச்சிப் பணியில் கொஞ்சமாவது அவர் காட்ட வேண்டும். அவர் கனவுலகில் வாழ்கிறார்.
மெஹபூபா முப்தி தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி
வாக்குறுதியை மீறும் அஜித் பவார்!
மஹா ராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், தேசியவாத காங்., தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் பா.ஜ.,வை விமர்சித்து வருகிறார். இதை ஏற்க முடியாது. அவர் நிறுத்தாவிட்டால், கடந்த கால நினைவுகளை நினைவுபடுத்த வேண்டியிருக்கும். ஒரு வரையொருவர் விமர்சிக்கக் கூ டாது என்ற வாக்குறுதியை அவர் மீறுகிறார்.
சந்திரசேகர் பவன்குலே மஹாராஷ்டிர அமைச்சர், பா.ஜ.,

