தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பாலியல் வன்கொடுமை வழக்கு: பா.ஜ., 'மாஜி' எம்.பி., விடுவிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கு: பா.ஜ., 'மாஜி' எம்.பி., விடுவிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கு: பா.ஜ., 'மாஜி' எம்.பி., விடுவிப்பு


UPDATED : ஆக 03, 2026 04:00 PM

ADDED : ஆக 03, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 04:00 PM ADDED : ஆக 03, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- டில்லி சிறப்பு நிருபர் -

மல்யுத்த வீராங்கனையர் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்க, 69, விடுவித்து, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பதவி வகித்த காலத்தில், பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மல்யுத்த வீராங்கனையர் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் புகார் தெரிவித்தனர். டில்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து, பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, 1,500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி அஸ்வினி பன்வார், ''அரசு தரப்பு மற்றும் மனுதாரர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் சமர்பிக்கப்படவில்லை. எனவே, பிரிஜ் பூஷண் சரண் சிங், இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வினோத் தோமர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்,'' என்றார்.

தீர்ப்பு குறித்து பிரிஜ் பூஷண் கூறுகையில், ''அரசியல் உள்நோக்கம் காரணமாகவே என் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக துவக்கத்தில் இருந்தே கூறி வருகிறேன். நிரூபித்தால் துாக்கு தண்டனை ஏற்கவும் தயார் என தெரிவித்தேன். தற்போது நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us