வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்
வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்
ADDED : ஜன 30, 2024 05:27 PM

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு கடந்த 10 ஆண்டுகளில் வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
புதுடில்லியில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் கணினிமயமாக்கல் திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மே மாதத்துடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு இரண்டு பெரிய பணிகளைச் செய்துள்ளது.
ஒன்று நாட்டின் 23 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது மற்றும் 60 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன், மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தியது. இரண்டாவது கூட்டுறவு அமைச்சகம் மூலம் சுயவேலைவாய்ப்பைக் கொண்டு வந்தது. இந்த அரசு வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.