ADDED : மார் 26, 2024 11:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பஞ்சாபில் பா.ஜ., தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
லோக்சபாவுக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ‛ இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இங்கு தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளன.
அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பா.ஜ., ஆலோசித்து வந்ததாகவும், அது தொடர்பாக இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், பஞ்சாபில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ஜ., மாநில தலைவர் சுனில் ஜக்கார் கூறியுள்ளார்.

