ADDED : ஏப் 21, 2024 05:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: 'என்னையையும், உறவினர் அபிஷேக்கையும் குறிவைத்து பா.ஜ., செயல்படுகிறது. இதனால் நாங்கள் பாதுகாப்பு இல்லாதது போல் உணர்கிறோம்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மே.வங்க மாநிலம் பலூர்காட் தொகுதி திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து குமார்கஞ்ச் பகுதியில் நடந்த கூட்டத்தில் மம்தா பேசியதாவது: என்னையையும், அபிஷேக்கையும் குறி வைத்து பா.ஜ., செயல்படுகிறது. இதனால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.
ஆனால், இதனைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

