உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 01, 2024 06:28 AM

அ நிறம் | அளவு
கலபுரகி: கலபுரகி அருகே சரசம்பா கிராமத்தில் வசித்தவர் மகாந்தப்பா சித்தராமப்பா, 45. பா.ஜ., பிரமுகர். சரசம்பா கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலரும் ஆவார்.
நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு காரில் வந்த, நான்கு பேர் கும்பல், மகாந்தப்பாவை வழிமறித்து அவரிடம் தகராறு செய்தனர்.
பின்னர் காரில் இருந்த கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து, மகாந்தப்பாவை சரமாரியாக தாக்கிவிட்டு, காரில் தப்பினர். உயிருக்கு போராடியவரை குடும்பத்தினர் மீட்டு, மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். மகாந்தப்பாவை கொன்றது யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.
