ரத்த தானம் செய்ததாக பா.ஜ., மேயர் பித்தலாட்டம் : எல்லாமே நடிப்பா கோபால் ? கலாய்த்த நெட்டிசன்கள்
ரத்த தானம் செய்ததாக பா.ஜ., மேயர் பித்தலாட்டம் : எல்லாமே நடிப்பா கோபால் ? கலாய்த்த நெட்டிசன்கள்
UPDATED : செப் 20, 2024 08:19 PM
ADDED : செப் 20, 2024 08:14 PM

முர்தாபாத்: உ.பி.யில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி நடந்த ரத்ததான முகாமில் பங்கேற்ற பா.ஜ., மேயர், ஒருவர் தானும் ரத்தம் கொடுத்ததாக நாடகமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரமதர் மோடியின் 74 வது பிறந்த நாளை நாடு முழுதும் பா.ஜ.,வினர் கொண்டாடினர். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்நிலையில் மோடி பிறந்த நாளையொட்டி உபி. மாநிலம் முர்தாபாத் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணியினர் சார்பில் ரத்ததான முகாம் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமை துவக்கி வைக்க முர்தாபாத் மாநகராட்சி மேயர் வினோத் அகர்வால் வந்தார்.
அப்போது தானும் ரத்ததானம் வழங்கியதாக செய்தி வெளியிடுவதற்காக மேயர் வினோத் அகர்வாலை படுக்கையில் படுக்க வைத்து மேயர் சிரித்த முகமத்துடன் ரத்தம் கொடுப்பது போன்று புகைப்படம் எடுக்க வைத்தனர்.
உண்மையில் மேயர் ரத்தம் வழங்காமல் நாடகமாடியது தெரியவந்தது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து நடந்த விசாரணையில் ரத்தம் வழங்குவதற்கு முன் மேயரை பரிசோதித்ததில் அவர் சர்க்கரை நோயாளி என்பதால் ரத்தம் எடுக்காமல் ரத்தம் கொடுத்தது போன்று புகைப்படம் எடுக்க வைத்ததும் தெரியவந்தது.
எனினும் சர்க்கரை நோயாளி என்றால் ரத்தம் கொடுக்காமல் ரத்ததானமுகாமை துவக்கி வைத்து விட்டு போக வேண்டியது தானே.. ஏன் ரத்தம் வழங்கியதாக நாடகம் ஆட வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி விமர்சிக்கின்றனர்.