தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கான்ட்ராக்டரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜ., - எம்.எல்.ஏ., கைது

 கான்ட்ராக்டரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜ., - எம்.எல்.ஏ., கைது

 கான்ட்ராக்டரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய பா.ஜ., - எம்.எல்.ஏ., கைது


ADDED : பிப் 22, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கதக்: கான்ட்ராக்டரிடம் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, சிரஹட்டி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி மற்றும் அவரது உதவியாளர்கள் இருவரை லோக் ஆயுக்தா போலீசார் நேற்று கைது செய்தனர்.

கர்நாடக அரசின் சிறிய நீர்ப்பாசனத்துறை சார்பில், கதக் மாவட்டம் சிரஹட்டி டவுனில், சாலையோரம் தடுப்பு சுவர் கட்ட டெண்டர் விடுக்கப்பட்டது.

தடுப்பு சுவர் இதையடுத்து, கான்ட்ராக்டர் விஜய் பூஜாரி என்பவர், சிரஹட்டி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானியை சந்தித்து, தடுப்பு சுவர் கட்டும் டெண்டரை, தனக்கு வாங்கித் தரும்படி கோரிக்கை வைத்தார்.

அதற்கு, 11 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுக்கும்படி, கான்ட்ராக்டரிடம் எம்.எல்.ஏ., கேட்டு உள்ளார்.

முதற்கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக பேசப்பட்டது. கடைசி நேரத்தில் மனம் மாறிய கான்ட்ராக்டர், எம்.எல்.ஏ., சந்துரு லமானி மீது லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார்.

கதக் லோக் ஆயுக்தா எஸ்.பி., சித்தலிங்கப்பா, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை, அவரிடம் கொடுத்து அனுப்பினார்.

நேற்று மதியம் லட்சுமேஸ்வர் டவுனில் உள்ள, சந்துரு லமானிக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்ற கான்ட்ராக்டர், லஞ்ச பணத்தை எம்.எல்.ஏ.,விடம் கொடுத்தார்.

எம்.எல்.ஏ.,வின் உதவியாளர்கள் மஞ்சுநாத் வால்மீகி, குரு லமானி ஆகியோர் பணத்தை வாங்கினர்.

இந்த நேரத்தில், லோக் ஆயுக் தா எஸ்.பி., சித்தலிங்கப்பா மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ., உதவியாளர்கள் ஜன்னல் வழியாக, 4.50 லட்சம் ரூபாயை வெளியே வீசினர். வெளியே சென்ற போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணை எம்.எல்.ஏ., அமர்ந்திருந்த அறையில் இருந்து, 50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, சந்துரு லமானி, மஞ்சுநாத் வால்மீகி, குரு லமானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து சென்று, எஸ்.பி., சித்தலிங்கப்பா விசாரணை நடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us