sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்திப்பு

/

துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்திப்பு

துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்திப்பு

துணை முதல்வர் சிவகுமாருடன் பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்திப்பு


ADDED : பிப் 20, 2024 06:39 AM

Google News

ADDED : பிப் 20, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, முன்னாள் அமைச்சர் கோபாலய்யா சந்தித்துப் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின், மஹாலட்சுமி லே - அவுட் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கோபாலய்யா. 2019ல் இவர், அந்த கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பா.ஜ., அரசில் கலால் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

கடந்த சட்டசபை தேர்தலிலும், இதே தொகுதியில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வானார். சமீப நாட்களாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் பார்வை, காங்கிரஸ் மீது பதிந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பே, காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதில் கோபாலய்யாவும் ஒருவர்.

ஏற்கனவே யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். இவர் எந்த நேரத்திலும், கட்சி தாவக்கூடும்.

இந்நிலையில் மஹாலட்சுமி லே - அவுட் எம்.எல்.ஏ., கோபாலய்யா, துணை முதல்வர் சிவகுமாரை நேற்று, பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில், சந்தித்துப் பேசினார். இது பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us