தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ துணைநிலை கவர்னருக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., கடிதம்

துணைநிலை கவர்னருக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., கடிதம்

துணைநிலை கவர்னருக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., கடிதம்


ADDED : பிப் 13, 2025 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 10:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரோஹிணி:பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம், சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பு ஆகிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு ரோஹிணி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., விஜேந்தர்குப்தா கடிதம் எழுதி வலியுறுத்தினார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத்திட்டம், சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை செயல்படுத்துவது, தேசிய தலைநகரில் சுகாதார சேவைகளை கணிசமாக மேம்படுத்தும்.

இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக டில்லிக்கு மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு 2,406 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது.

டில்லியின் சுகாதார கட்டமைப்பு முந்தைய ஆம் ஆத்மி அரசின் தவறான நிர்வாகத்தால் சரிந்தது. மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் தவறான விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது.

டில்லியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்றவுடன், இந்தத் திட்டங்கள் முழு பலத்துடன் செயல்படுத்தப்படும். இதன் மூலம் டில்லி சுகாதாரத் துறையில் முன்னணி நகரமாக மாறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us