தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வக்ப் வாரியத்தை கண்டித்து 2வது நாளாக பா.ஜ., போராட்டம்

வக்ப் வாரியத்தை கண்டித்து 2வது நாளாக பா.ஜ., போராட்டம்

வக்ப் வாரியத்தை கண்டித்து 2வது நாளாக பா.ஜ., போராட்டம்


ADDED : நவ 23, 2024 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு, : வக்பு வாரிய நோட்டீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரண்டாவது நாளாக பெங்களூரில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், பா.ஜ., போராட்டம் நடத்தியது.

'நமது நிலம், நமது உரிமை' என்ற கோஷத்துடன் நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது:

வக்பு வாரிய நோட்டீசால், மக்கள் பீதியில் உள்ளனர். முன் அறிவிப்பு அன்றி, இரவோடு இரவாக நோட்டீஸ் அளிக்கின்றனர். எனவே மாநிலத்தில் கலவரம் வெடிக்கும். இது ஒரு சிறு விஷயம் என, அமைச்சர் கூறுகிறார். டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி என, அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுகின்றனர்.

காங்கிரஸ் எப்போதும், முஸ்லிம்களை கவரும். நமது இளம்பெண்களை கடத்தும் வேலைக்கு ஊக்கமளிக்கிறது.

'நான் ஏழைகளுக்கு ஆதரவாக இருப்பவன்' என, கூறிக்கொள்ளும் முதல்வர் சித்தராமையா, அது போன்று நடக்கவில்லை.சித்தராமையா பதவிக்கு வந்த பின், முஸ்லிம்களுக்கு இரண்டு கொம்புகள் வந்துள்ளன. இப்போது பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்ய துவங்கியுள்ளனர். இந்த விஷயத்திலும்,பணத்தை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ஆடு தொடாத கீரை இல்லை. சித்தராமையா வரி விதிக்காத பொருட்கள் இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கோவில், விவசாயிகளின் நிலம் காப்பாற்றப்பட வேண்டுமானால், 'சூப்பர் மேன்' நரேந்திர மோடி வர வேண்டும். தலை வணங்கி நடக்க வேண்டும் என, ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தியிடம், துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். அதே போன்று நேற்று (நேற்று முன் தினம்) மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதல்வர் சித்தராமையா சந்திக்க சென்றபோது, தலை வணங்கி நடக்கும்படி கூறியிருந்தால், உங்கள் கதி என்ன?

சாளுக்கியர் காலத்து, பீரேஸ்வரா சுவாமி கோவில்கள் சொத்துகளை வக்பு வாரியத்தில் சேர்த்துள்ளனர்.

கித்தூர் ராணி சென்னம்மா, லிங்காயத்களுக்கு கொடுத்த நிலத்தை, வக்பு வாரியத்தில் சேர்க்கின்றனர். வக்பு சட்டம் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்பேசினார்.

மத்திய இணை அமைச்சர் ஷோபா, எம்.பி., மோகன், எம்.எல்.ஏ.,க்கள் அஸ்வத் நாராயணா, ராமமூர்த்தி மற்றும், எம்.எல்.சி.,க்கள், தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

யாருக்கு?

சி.டி.ரவி பேசியதாவது:கடந்த 1995ல் வக்பு சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வரப்பட்டது. வக்பு வாரியம் ஒரு இடத்தை தன்னுடையது என, கூறினால் அது பற்றி கேள்வி எழுப்பும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. ஓநாயிடம் சென்று, ஆட்டுக்குட்டி நியாயம் கேட்பதை போன்றுள்ளது.தலித்துகள் வீடு கட்டிய இடத்தை, வக்பு வாரியம் தன்னுடையது என்கிறது. விதான்சவுதாவும் கூட தன்னுடையது என்றாலும் ஆச்சரியம் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.



ஹிந்துகளுக்கு சொந்தமான கோவில்கள், மடம், பள்ளி உட்பட பலரின் நிலங்கள் தனக்கு சொந்தம் என, வக்பு வாரியம் நோட்டீஸ் அளிப்பதை கண்டித்து, கர்நாடக முழுதும், 2வது நாளாக பா.ஜ., நேற்று போராட்டம் நடத்தியது.

யாருக்கு?

சி.டி.ரவி பேசியதாவது:கடந்த 1995ல் வக்பு சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வரப்பட்டது. வக்பு வாரியம் ஒரு இடத்தை தன்னுடையது என, கூறினால் அது பற்றி கேள்வி எழுப்பும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. ஓநாயிடம் சென்று, ஆட்டுக்குட்டி நியாயம் கேட்பதை போன்றுள்ளது.தலித்துகள் வீடு கட்டிய இடத்தை, வக்பு வாரியம் தன்னுடையது என்கிறது. விதான்சவுதாவும் கூட தன்னுடையது என்றாலும் ஆச்சரியம் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.



யாருக்கு?

சி.டி.ரவி பேசியதாவது:கடந்த 1995ல் வக்பு சட்டத்துக்கு திருத்தம் கொண்டு வரப்பட்டது. வக்பு வாரியம் ஒரு இடத்தை தன்னுடையது என, கூறினால் அது பற்றி கேள்வி எழுப்பும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. ஓநாயிடம் சென்று, ஆட்டுக்குட்டி நியாயம் கேட்பதை போன்றுள்ளது.தலித்துகள் வீடு கட்டிய இடத்தை, வக்பு வாரியம் தன்னுடையது என்கிறது. விதான்சவுதாவும் கூட தன்னுடையது என்றாலும் ஆச்சரியம் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us