தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/லோக்சபா தேர்தலுக்கு தயாராக பா.ஜ..வேகம்!

லோக்சபா தேர்தலுக்கு தயாராக பா.ஜ..வேகம்!

லோக்சபா தேர்தலுக்கு தயாராக பா.ஜ..வேகம்!


UPDATED : ஜன 13, 2024 02:18 AM

ADDED : ஜன 11, 2024 11:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2024 02:18 AM ADDED : ஜன 11, 2024 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அயோத்தி ராமர் கோவில் துவக்க விழா ஏற்பாடுகளில் ஹிந்து அமைப்புகளை போலவே பாரதிய ஜனதா தொண்டர்களும் ஆர்வமாக பங்கெடுத்து வருகின்றனர். ஆனால், அக்கட்சியின் தலைவர்கள் சத்தமில்லாமல் வேறொரு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வேலையில் மண்டல வாரியாக, மாநில வாரியாக, வட்டார வாரியாக நிர்வாகிகளை டில்லிக்கு வரவழைத்து இரவு, பகலாக விவாதிக்கின்றனர் முக்கிய தலைவர்கள்.

மீண்டும் சான்ஸ்


முந்தைய தேர்தல்களில் காணப்பட்ட மேல்மட்ட ஒற்றுமையின்மை இம்முறை தலைதுாக்க விடக்கூடாது என்பது அமித் ஷா, நட்டா பலமாக வலியுறுத்தும் விஷயம்.

இதற்காக, கட்சியில் இதுவரை பின்பற்றப்பட்ட எழுதப்படாத விதி ஒன்றை அவர்கள் விலக்கிக் கொண்டனர். 70 வயதை கடந்தவர்களுக்கு தேர்தலில் நிற்க டிக்கெட் வழங்குவதில்லை என்பது அந்த விதி.

இதனால் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பலருக்கு மீண்டும் சான்ஸ் கிடைக்கும். அவர்களுக்கு அதிருப்தி ஏற்படாது; அதனால் உள்ளடி வேலை அல்லது ஒத்துழையாமை ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டார்கள் என்பது கணக்கு.

அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், வி,கே.சிங்., இந்தர்ஜித்சிங், அர்ஜுன் ராம் மெஹவால், கிரிராஜ் சிங், மூத்த தலைவர்கள் ரவிசங்கர் பிரசாத், அலுவாலியா, ராஜேந்திர அகர்வால், சந்தோஷ் கங்குவார், ராதா மோகன்சிங், ஜகதாம்பிகா பால் என பலரும் சேதி கேள்விப்பட்டு பரவசத்தில் இருக்கின்றனராம்.

பொதுக்குழு, செயற்குழு


இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வகித்து, அதன் வழியாக சொந்த ஊரில் பிரபலமான புள்ளிகளுக்கு லோக்சபா டிக்கெட் கொடுக்கலாம் என்பது அடுத்த முடிவு.

எப்படியும் ஜெயிக்க வேண்டும் என அவர்கள் வேலை செய்வர். பண பலம் ஆள் பலத்துக்கு பஞ்சம் இருக்காது என்பதால் இந்த ஏற்பாடு.

பா.ஜ. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை பிரமாண்டமாக டில்லியில் நடத்துவது மூன்றாவது முடிவு.

ராமர் கோவில் கட்டுதல், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல்ஆகிய பிரதான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட பின் நடக்கப்போகும் பொதுக்குழு என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

அதற்கு முன் இம்மாத கடைசியில், கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடுகிறது. அதில் மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதாவது, நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 160 தொகுதிகளில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த ஆய்வின் அடிப்படையில் செலக்ட் செய்த வேட்பாளர்களை அறிவிக்க போகிறார்கள். எதிர்க்கட்சிகள் இன்னமும் கூட்டணியை கூட முடிவு செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ. வேட்பாளர் பட்டியல் வெளியானால் அது வாக்காளர்கள் மனதில் பாசிடிவான தோற்றத்தை உண்டாக்கும் என நம்புகின்றனர்.

கடந்த தேர்தலில் 437 தொகுதிகளில் பா.ஜ. போட்டியிட்டது. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிவிட்டதால் இம்முறை அந்த இடங்களிலும் போட்டியிட்டாக வேண்டும். எனவே தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று மோடி-அமித்ஷா-நட்டா வட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

இதுவரை இந்தியா பார்த்தே இராத வகையில் மிகவும் பிரமாண்டமாக ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்தி, அதன் பிரமிப்பில் இருந்து மக்கள் விடுபடுவதற்கு முன்பே தேர்தல் வேலையின் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்புகின்றனர். இது அரசல் புரசலாக எதிர்க்கட்சிகளுக்கும் எட்டியிருக்கிறது. தேர்தல் தேதியைக் கூட இம்மாத இறுதிக்குள் அறிவித்து விடுவார்களோ என அந்த வட்டாரத்தில் கலக்கம் தென்படுகிறது. மத்திய அரசு நினைத்தால் லோக்சபாவின் ஆயுள் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்த ஆணையத்துக்கு அறிவுறுத்த இயலும்.

பொங்கலுக்கு மறு வாரம் அயோத்தி விழா நடக்கிறது. அதில் இருந்தே தேர்தல் களம் சூடு பிடிக்கலாம் என்ற அறிகுறி தெரிகிறது.

- நமது டில்லி நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us