sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 2024 - 25ல் பா.ஜ.,வுக்கு கிடைத்தது ரூ.3,112 கோடி! காங்கிரசுக்கு ரூ.299 கோடி; இதர கட்சிகளுக்கு ரூ.400 கோடி மட்டுமே!

/

தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 2024 - 25ல் பா.ஜ.,வுக்கு கிடைத்தது ரூ.3,112 கோடி! காங்கிரசுக்கு ரூ.299 கோடி; இதர கட்சிகளுக்கு ரூ.400 கோடி மட்டுமே!

தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 2024 - 25ல் பா.ஜ.,வுக்கு கிடைத்தது ரூ.3,112 கோடி! காங்கிரசுக்கு ரூ.299 கோடி; இதர கட்சிகளுக்கு ரூ.400 கோடி மட்டுமே!

தேர்தல் அறக்கட்டளை வாயிலாக 2024 - 25ல் பா.ஜ.,வுக்கு கிடைத்தது ரூ.3,112 கோடி! காங்கிரசுக்கு ரூ.299 கோடி; இதர கட்சிகளுக்கு ரூ.400 கோடி மட்டுமே!

2


UPDATED : டிச 22, 2025 01:22 AM

ADDED : டிச 22, 2025 01:05 AM

Google News

UPDATED : டிச 22, 2025 01:22 AM ADDED : டிச 22, 2025 01:05 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், 2024 - 25ம் நிதியாண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நிதி, 200 சதவீதம் அதிகரித்து, 3,811 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு மட்டும், 3,112 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள், தொழிலதிபர்கள் ரகசியமாக நன்கொடை வழங்கி வந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை' எனக் குறிப்பிட்டு, அத்திட்டத்தை, கடந்தாண்டு பிப்ரவரியில் ரத்து செய்தது.

தற்போது, தேர்தல் பத்திரங்களுக்கு பதிலாக தேர்தல் அறக்கட்டளை மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிந்தைய, 2024 - 25ம் நிதியாண்டில், ஒன்பது தேர்தல் அறக்கட்டளைகள் மட்டும் மொத்தம், 3,811 கோடி ரூபாயை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளன.

இதில், 82 சதவீதம், அதாவது, 3,112 கோடி ரூபாய் பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டு உள்ளது. காங்கிரசுக்கு, 8 சதவீதம், அதாவது, 299 கோடி ரூபாய்; மீதமுள்ள, 10 சதவீதம், அதாவது, 400 கோடி ரூபாய், இதர அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

Image 1511159

கடந்த 2023 - -24ம் நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பெறப்பட்ட நன்கொடை, 1,218 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024 - 25ம் நிதியாண்டில், 200 சதவீதம் அதிகரித்து, 3,811 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

'புருடென்ட்' என்ற தேர்தல் அறக்கட்டளை மட்டும், 2024 - 25ம் நிதியாண்டில், பா.ஜ.,வுக்கு, 2,180 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு, 'பார்தி ஏர்டெல், ஜிண்டால் ஸ்டீல், மேகா இன்ஜினியரிங், டொரண்ட் பார்மா' போன்ற முன்னணி நிறுவனங்கள் நன்கொடை வழங்கிஉள்ளன.

'டாடா' குழுமத்தால் நிர்வகிக்கப்படும், 'புரோகிரசிவ்' தேர்தல் அறக்கட்டளை வசூலித்த 917 கோடி ரூபாயில், 80.82 சதவீதத்தை, அதாவது 739 கோடி ரூபாயை பா.ஜ.,வுக்கு வழங்கியுள்ளது.

'நியூ டெமாக்ரடிக்' என்ற தேர்தல் அறக்கட்டளை, 'மஹிந்திரா' குழும நிறுவனங்களிடமிருந்து பெற்ற 160 கோடி ரூபாயில், 150 கோடி ரூபாயை பா.ஜ.,வுக்கு வழங்கி உள்ளது.

தேர்தல் அறக்கட்டளை பணி என்ன?

முன்பு இருந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில், எந்த கட்சிக்கு யார் நிதி வழங்குகின்றனர் என்பது ரகசியமாக இருந்தது. ஆனால், தற்போதைய தேர்தல் அறக்கட்டளை நடைமுறையால் நிதி பரிமாற்றத்தில் ஓரளவு வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதன்படி, நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தேர்தல் அறக்கட்டளைக்கு நிதி வழங்குவர். காசோலை, வரைவு காசோலை, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் இந்த நிதி வழங்கப்படுகிறது. தங்களுக்கு கிடைக்கும் நிதியை, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறக்கட்டளைகள் பிரித்து வழங்கும். எந்த கட்சிக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்ற விபரத்தை, தேர்தல் கமிஷனில் அவை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.








      Dinamalar
      Follow us