ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்! லிஸ்ட் வெளியிட்ட பா.ஜ.
ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்! லிஸ்ட் வெளியிட்ட பா.ஜ.
ADDED : டிச 09, 2024 03:27 PM

புதுடில்லி; ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., வெளியிட்டுள்ளது.
பார்லி. ராஜ்யசபாவில் 6 எம்.பி.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆந்திராவில் 3 இடங்கள், ஒடிசா, மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 6 இடங்களுக்கும் டிசம்பர் 20ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
டிசம்பர் 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் நாளை (டிச.10) இறுதி நாளாகும். டிச.13ம் தேதி மனுவை திரும்ப பெற இறுதி நாளாகும்.
இந் நிலையில், தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ., வெளியிட்டு உள்ளது. அவர்களின் பெயர் விவரம் வருமாறு;
ஆந்திரா - ராயகா கிருஷ்ணய்யா
ஹரியானா - ரேகா சர்மா
ஒடிசா - சுஜித் குமார்
ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த ராஜ்யசபா தேர்தல் பெரும் நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.