பா.ஜ., ரூ.2,100; காங்கிரஸ் ரூ.3,000; மஹா.,வில் போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதி!
பா.ஜ., ரூ.2,100; காங்கிரஸ் ரூ.3,000; மஹா.,வில் போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதி!
ADDED : நவ 10, 2024 02:00 PM

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என பா.ஜ.,வும், மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் கூட்டணி கட்சியும் தேர்தல் வாக்குறுதி வெளியிட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு குறுகிய காலமே உள்ளதால் பா.ஜ.,வின் மஹாயுதி கூட்டணியும், காங்கிரசின் மகா விகாஸ் அகாடியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. மும்பையில் நடந்த நிகழச்சியில் இன்று (நவ.,10) பா.ஜ., தேர்தல் வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
வாக்குறுதிகள் என்னென்ன?
* பெண்களுக்கு மாதம் ரூ.2,100 ஊதியத் தொகை வழங்கப்படும். மாதம் ரூ.2,100 வீதம் ஆண்டுக்கு மகளிருக்கு தலா ரூ.25,200 வழங்கப்படும்.
* அடுத்த ஐந்தாண்டுகளில் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும்.
* முதியோர் ஓய்வூதியத்தை 1,500 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.15 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்.
*மின் கட்டணத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
* 25,000 பெண் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள்
* 45,000 கிராமங்களுக்கு விரிவான சாலை அமைக்கப்படும்.
* விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும்.
காங்கிரஸ் கூட்டணி கட்சி வாக்குறுதி
மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தேர்தல் வாக்குறுதிகளை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்டனர்.
* மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால், மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.3000 வழங்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு, ரூ.3 லட்சம் உதவி பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் செயல்படுத்தப்படும்.
* விவசாயிகள் கடனை உரிய நேரத்தில் கட்டி முடித்தால், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.