தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ராகுல் ஏமாற்றுக்காரர்; பொய்களின் உருவம் பிரதமரை சீண்டியதற்கு பா.ஜ., விமர்சனம்

ராகுல் ஏமாற்றுக்காரர்; பொய்களின் உருவம் பிரதமரை சீண்டியதற்கு பா.ஜ., விமர்சனம்

ராகுல் ஏமாற்றுக்காரர்; பொய்களின் உருவம் பிரதமரை சீண்டியதற்கு பா.ஜ., விமர்சனம்


UPDATED : நவ 04, 2026 12:29 PM

ADDED : நவ 04, 2026 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:29 PM ADDED : நவ 04, 2026 12:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– சிறப்பு நிருபர் –: வெளிநாட்டு உதவி மூலம் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததாக, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்த நிலையில், ‘ராகுல் ஒரு ஏமாற்றுக்காரர். பொய்களின் மொத்த உருவமும் அவர் தான்’ என, பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.

குஜராத்தில் கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டில் உள்ள சில தீயசக்திகள், நாட்டை பிளவுபடுத்த தொடர்ந்து சதி வேலைகளில் ஈடுபடுகின்றன. இதற்காக நம் நாட்டுக்கு எதிராக உள்ள வெளிநாட்டு தீயசக்திகளுடன் அவை கைகோர்த்துள்ளன’ என, குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த ராகுல், ‘பிரதமர் மோடி தொடர்ந்து பொய் பேசி வருகிறார். வெளிநாட்டு உதவி காரணமாகவே அவர் ஆட்சிக்கு வந்தார்’ என, விமர்சித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, டில்லியில் நேற்று, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் கூறியதாவது:

ராகுல் ஒரு ஏமாற்றுக்காரர்; தரம் தாழ்ந்தவர். பொய்களின் மொத்த உருவமும் அவர் தான். அவர் கூறும் பொய், கடைசியில் அவருக்கே பாதகமாகி விடுகிறது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பிரிட்டனின் லண்டனில் பேசிய ராகுல், நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடும்படி அழைப்பு விடுத்தார். நம் நாடு நன்றாக இருப்பது அவருக்கு பிடிக்கவில்லையா? ராகுல் ஏன் அடிக்கடி வெளிநாடுக்கு செல்கிறார்; யாரை ரகசியமாக சந்திக்கிறார்? அவரது வெளிநாட்டு பயணங்களை சுற்றியுள்ள ரகசியம், நம் தேச பாதுகாப்புக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்து அமெரிக்கா பயணம்?


ராகுல் மற்றொரு விடுமுறை பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். வரும் 16 – 19 வரை அமெரிக்காவிற்கு அவர் செல்லவுள்ளார். அப்போது, தன் கலகக்கார கூட்டாளிகளை சந்திக்க உள்ளார். தேர்தலில், எந்த ஓட்டு திருட்டும் இல்லை; ராகுலின் திருட்டு வேலை மட்டுமே உள்ளது.
- பிரதீப் பண்டாரி
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us