மம்தா அரசின் குற்றப்பத்திரிகை இன்று வெளியிடுகிறது பா.ஜ.,
மம்தா அரசின் குற்றப்பத்திரிகை இன்று வெளியிடுகிறது பா.ஜ.,
ADDED : மார் 28, 2026 02:42 AM

கொல்கட்டா: மேற்கு வங்க தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், ஆளும் திரிணமுல் காங்கிரசின், 15 ஆண்டு கால ஆட்சியை விவரிக்கும் வகையில், 14 முக்கிய குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை, எதிர்க்கட்சியான பா.ஜ., இன்று வெளியிடுகிறது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியின், 15 ஆண்டு கால ஆட்சியை விவரிக்கும் வகையில், 14 முக்கிய குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை பா.ஜ., இன்று வெளியிடுகிறது.
மேற்கு வங்கத்துக்கு இன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை வெளியிடுகிறார்.
ஊழல், முறைகேடுகள், நிர்வாக அராஜகம், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். பிரசார வியூகத்தின் ஒரு பகுதியாக, இந்த குற்றப்பத்திரிகையை வாக்காளர்களிடையே வினியோகிக்கவும் பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
