உத்தர்க்காண்ட் முதல்வரை மாற்ற பா.ஜ. மேலிடம் முடிவு
உத்தர்க்காண்ட் முதல்வரை மாற்ற பா.ஜ. மேலிடம் முடிவு
UPDATED : செப் 09, 2011 01:13 PM
ADDED : செப் 09, 2011 10:08 AM
புதுடில்லி: உத்தர்க்காண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி தற்போது முதல்வராக உள்ள ரமேஷ் பொக்ரியாலை நீக்கிவிட்டு, மீண்டும் முன்னாள் முதல்வராக இருந்த பி.சி.கந்தூரியை நியமிக்க பா.ஜ. மேலிடம் முடிவு செய்துள்ளது. உத்தர்க்காண்ட் மாநிலத்தின் முதல்வராக பா.ஜ.வின் ரமேஷ் பொக்கரியால் உள்ளார். இவரது செயல்பாடுகள் அம்மாநிலத்தின் க்ளீன் இமேஜ் முதல்வராக இருந்த போதிலும். அடுத்த ஆண்டு உத்தர்க்காண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நாக்பூரில் பா.ஜ. தேசிய தலைவர் நிதின்கட்காரி தலைமையில் பா.ஜ. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்குப்பி்ன் ரமேஷ்பொக்ரியாலை மாற்றிவிட்டு மீண்டும் கந்தூரியை முதல்வராக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பி.சி. கந்தூரியே முதல்வராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.