திறந்த காரில் மகனை அழைத்து சென்று மக்களுக்கு அறிமுகம் செய்த பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத்
திறந்த காரில் மகனை அழைத்து சென்று மக்களுக்கு அறிமுகம் செய்த பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத்
ADDED : மார் 04, 2024 07:12 AM
சிக்கபல்லாப்பூர்: திறந்த காரில் அழைத்து சென்று, சிக்கபல்லாப்பூர் தொகுதி மக்களுக்கு மகனை, பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் அறிமுகப்படுத்தினார்.
லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதி பா.ஜ., 'சீட்' டுக்கு, முன்னாள் அமைச்சர் சுதாகர், எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் இடையில் நீயா, நானா போட்டி ஏற்பட்டு உள்ளது.
தனது மகன் அலோக்கிற்கு 'சீட்' வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்களுக்கு, விஸ்வநாத் அழுத்தம் கொடுத்து வருகிறார். சுதாகரும் விடாப்பிடியாக உள்ளார்.
இந்நிலையில் சிக்கபல்லாப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எலஹங்கா, தொட்டபல்லாப்பூர், கவுரிபிதனுார், குடிபண்டே, பாகேபள்ளி, சிக்கபல்லாப்பூர், தேவனஹள்ளி, ெஹாஸ்கோட் ஆகிய எட்டு சட்டசபை தொகுதி மக்களுக்கும், தனது மகன் அலோக்கை அறிமுகப்படுத்துவதற்காக, திறந்த காரில் நேற்று விஸ்வநாத் அழைத்து சென்றார்.
அலோக், விஸ்வநாத்திற்கு வழிநெடுக, தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
பாகேபள்ளி அருகே பீச்சனஹள்ளி கிராமத்தில், பா.ஜ., தொண்டர்களுக்கு விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரியாணி, சிக்கன் குழம்பு, முட்டை, வாழைப்பழம் பரிமாறப்பட்டது.
சுதாகரின் சொந்த ஊரான சிக்கபல்லாப்பூர் பைரேசந்திராவில், அலோக், விஸ்வநாத்தை ஆப்பிள் மாலை அணிவித்து, தொண்டர்கள் வரவேற்றனர்.

