2025ல் பீஹார் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
2025ல் பீஹார் மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
ADDED : ஜன 27, 2024 04:40 PM

பாட்னா: வரும் 2025ம் ஆண்டு பீஹாரில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பீஹார் மாநில முதல்வரான நிதீஷ் குமார் பா.ஜ., கூட்டணியில் இணையப் போவதாக செய்திகள் பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீஹார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிரிராஜ் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வரும் 2025ல் பீஹாரில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். இந்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெறும். மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள்.
மாநிலத்தில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நான் கவனித்து வருகிறேன். நிதீஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தாததன் காரணமாகவே அவர் அதிருப்தி அடைந்துள்ளார். நிதீஷ் குமாருக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், லாலு பிரசாத் யாதவ் அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

