அயோத்தி ராமர் கோயில் கனவு நனவானது: பா.ஜ., தலைவர் நட்டா பெருமிதம்
அயோத்தி ராமர் கோயில் கனவு நனவானது: பா.ஜ., தலைவர் நட்டா பெருமிதம்
UPDATED : ஏப் 14, 2024 09:38 AM
ADDED : ஏப் 14, 2024 09:25 AM

புதுடில்லி: நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்., 14) டில்லியில் பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். அம்பேத்கர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கை வெளியானது.
முன்னதாக பா.ஜ., தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில் ; பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏழைகள், பெண்கள் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டு வருகிறது. காஷ்மீர் 370 நீக்கினோம். அயோத்தி ராமர் கோயில் கனவு நனவானது. பிரமாண்ட கோயில் கட்டி முடித்துள்ளோம். முத்தலாக் ரத்து செய்தோம். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினோம். பெண்களுக்கான கேஸ் இணைப்பு வழங்கினோம். அனைவருக்கும் வங்கி கணக்கை துவக்கினோம். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றினோம். கோவிட் காலத்தில் சரியான வழிமுறையை கையாண்டு வெற்றி பெற்றோம். உலகிற்கே தடுப்பூசி வழங்கினோம். இலவச வீடு, 11 லட்சம் டாய்லட்டுகள் கட்டி கொடுத்தோம்.
இந்த தேர்தல் அறிக்கை தேசத்தின் வளர்ச்சிக்கானதாக இருக்கும். சமூக நீதிக்கான போராட்டம் துவக்கி உள்ளோம் என்றார். அனைவருக்குமான வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடுபட்டு வருகிறது. தேர்தல் அறிக்கை தொடர்பாக நமோ செயலி மூலம் 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டோம். அம்பேத்கர் கனவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஏழை, தலித் மக்கள் நலனை மையமாக கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என நட்டா கூறினார்.
