காவிரி நீரில் இரட்டை நிலைப்பாடு பா.ஜ., சோமசேகர் கோபம்
காவிரி நீரில் இரட்டை நிலைப்பாடு பா.ஜ., சோமசேகர் கோபம்
ADDED : பிப் 21, 2024 06:55 AM
பெங்களூரு : காவிரி குடிநீர் 110 கிராமங்களுக்கு வழங்குவதில், இரட்டை நிலைப்பாடு ஏற்பட்டு உள்ளதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர், அரசை தாக்கி பேசினார்.
கர்நாடகா சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர் சோமசேகர் நேற்று பேசுகையில், ''பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு, காவிரி குடிநீர் வழங்குவோம் என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறினார். முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில், இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறப்பட்டு உள்ளது. நாங்கள் எதை நம்ப வேண்டும். இந்த விஷயத்தில் அரசு இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதற்கு துணை முதல்வர் பதில் அளிக்க வேண்டும்,'' என்றார்.
சோமசேகர் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், துணை முதல்வர் சிவகுமார் திணறினார்.
கடந்த சில தினங்களாக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த, சோமசேகர் திடீரென அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

