சுயேட்சையாக போட்டியிடும் பா.ஜ.,வின் ஈஸ்வரப்பா சஸ்பெண்ட்
சுயேட்சையாக போட்டியிடும் பா.ஜ.,வின் ஈஸ்வரப்பா சஸ்பெண்ட்
UPDATED : ஏப் 22, 2024 08:48 PM
ADDED : ஏப் 22, 2024 08:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: கர்நாடகாவின் ஷிவ்மோகா லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பா.ஜ. வைச் சேர்ந்த ஈஸ்வரப்பாவை கட்சி மேலிடம் சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டது.
இம்மாநிலத்தில் ஷிவ்மோகா லோக்சபா தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் ராகவேந்திருக்கு பா.ஜ., மேலிடம் சீட் வழங்கியது. தனக்கு கிடைக்கும் என ஈஸ்வரப்பா எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததால், அதிருப்தியடைந்த ஈஸ்வரப்பா கட்சி கட்டுப்பாட்டை மீறி ஷிவ்மோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு செய்தார்.
இந்நிலையில் பா.ஜ. மேலிடம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், இதையடுத்து ஈஸ்வரப்பாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து 6 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

