ADDED : ஜன 27, 2025 05:26 AM
டேராடூன்: உத்தரகண்ட் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று, மொத்தம் உள்ள 11 மேயர் பதவிகளில், 10ஐ கைப்பற்றியது.
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு, காலியாக உள்ள மேயர் பதவி உள்ளிட்ட 100 இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 23ல் நடந்தது. 11 மாநகராட்சி, 43 நகராட்சி, 46 கிராம பஞ்சாயத்து பதவிகளுக்கான தேர்தலில் 65.4 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.
நேற்று மாலையில் ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்தது.
ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், மொத்தமுள்ள 11 மேயர் பதவிகளில், 10 இடங்களை பா.ஜ., கைப்பற்றியது.
டேராடூன், ரிஷிகேஷ், காசிபூர், ஹரித்வார், ரூர்கி, கோத்வார், ருத்ராபூர், அல்மோரா, பிதோராகர், ஹல்த்வானி ஆகிய தொகுதிகளில் பா.ஜ., வென்றது. பவுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
கடந்த 2018ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், இரண்டு மேயர் பதவிகளை கைப்பற்றிய காங்., இந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

