டில்லியில் குண்டு வெடிப்பா? பலத்த சத்தம், பரபரப்பு; போலீசார் விசாரணை
டில்லியில் குண்டு வெடிப்பா? பலத்த சத்தம், பரபரப்பு; போலீசார் விசாரணை
ADDED : நவ 28, 2024 01:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் மர்மபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இது குண்டு வெடிப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லியின் பிரசாந்த் விகார் பகுதியில், இன்று (நவ.,28) மர்மபொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. பகுதி மக்கள் பதறியடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, 4 தீயணைப்பு படை வாகனத்தில், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர்.
இது குண்டு வெடிப்பா? என போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை. வெடி விபத்து ஏற்பட்ட போது பயங்கர சத்தம் கேட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகு தெரியவரும்.