சி.ஆர்.பி.எப்., பள்ளி அருகே குண்டுவெடிப்பு; டில்லியில் அதிர்ச்சி சம்பவம்!
சி.ஆர்.பி.எப்., பள்ளி அருகே குண்டுவெடிப்பு; டில்லியில் அதிர்ச்சி சம்பவம்!
ADDED : அக் 20, 2024 10:36 AM

புதுடில்லி: டில்லி ரோகினி பகுதியில் சி.ஆர்.பி.எப்., பள்ளிக்கு வெளியே குண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லி, ரோகினி மாவட்டத்தில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில், சி.ஆர்.பி.எப்., பப்ளிக் பள்ளி அருகே இன்று (அக்., 20) குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சம்பவம் குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், இரண்டு தீயணைப்புப் படைகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். வெடிகுண்டு செயலிழப்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.