ADDED : ஜூன் 19, 2026 02:04 AM

திருச்சூர்: உலக ரத்த தான தினத்தையொட்டி, ஜோயாலுக்காஸ் குழுமம், நாடு முழுதும் உள்ள ஷோரூம்களில் நேற்று முன்தினம் ரத்த தான முகாம்களை நடத்தியது.
இதை, குழுமத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு பிரிவான ஜோயாலுக்காஸ் அறக்கட்டளை முன்னெடுத்தது.
இதில், ஊழியர்கள் பங்கேற்றனர். கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள ஜோயாலுக்காஸ் அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமை, ஜோயாலுக்காஸ் குழுத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோயாலுக்காஸ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜோயாலுக்காஸ் பேசுகையில், ''ரத்த தானம் என்பது உயிர்களை காப்பாற்றும் திறன் உடைய, மிக உன்னதமான மானிதாபிமான செயல்களில் ஒன்று.
''தன்னார்வ ரத்த தானத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில், நாடு முழுதும் முகாம்களை ஏற்பாடு செய்ய முடிந்ததில் குழுமத்திற்கு மகிழ்ச்சி,'' என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்க ரத்த வங்கியின் இயக்குநர் டாக்டர் கோபிநாத், ஜோயாலுக்காஸ் குழும இயக்குநர் ஜாலி ஜாய் ஆலுக்காஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலக ரத்த தான தினத்தையொட்டி, ஜோயாலுக்காஸ் குழுமம் சார்பில், ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்கான பிரசாரத்தை கேரள மாநிலம் திருச்சூரில், பலுான்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்த ஜோயாலுக்காஸ் குழுமத்தினர்.
