ADDED : செப் 21, 2024 11:19 PM
பெங்களூரு: பி.எம்.டி.சி., பயிற்சி மையம் சார்பில், பொதுமக்களுக்கு கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
பி.எம்.டி.சி., பயிற்சி மையம் சார்பில், பொதுமக்களுக்கு கனரக மற்றும் இலகு ரக வாகன ஓட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இலகு ரக வாகனங்கள் ஓட்டும் பயிற்சி; 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கனரக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஓட்டுனர் பயிற்சிக்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, ஐந்து பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோக்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 26 நாட்கள் பயிற்சிக்கு பின், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு பி.எம்.டி.சி., உதவி செய்யும்.
இலகு ரக வாகன பயிற்சிக்கு, தங்கும் வசதியில்லாமல் 7,000 ரூபாய்; தங்கும் வசதியுடன் 13,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகன பயிற்சிக்கு தங்கும் வசதியில்லாமல் 11,000 ரூபாய், தங்கும் வசதியுடன் 16,700 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல் வேண்டுவோர் 77609 91085, 63648 58520 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது மாகடி பிரதான சாலையின், வட்டரஹள்ளியில் உள்ள பி.எம்.டி.சி., ஓட்டுனர் பயிற்சி மையத்துக்கு வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.