தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள்

புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள்

புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள்


ADDED : டிச 26, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண, மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

ஆனால் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கிய பின், தொலைவில் உள்ள வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ செல்ல பி.எம்.டி.சி., பஸ்களையே நாடுகின்றனர்.

அவர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, இணைப்பு பஸ்களை பி.எம்.டி.சி., இயக்குகிறது.

பயணியர் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில், புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படும்.

மாதவாரா, சிக்கபிதரகல்லு மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, இந்த பஸ்கள் இயக்கப்படும்.

இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, உட்புறங்களுக்கு பஸ்கள் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

ஜனவரி 1ம் தேதியில் இருந்து, இப்பாதைகளுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

எம்எப் - 49 எண்: இப்பஸ் சிக்கபிதரகல்லு மெட்ரோ ரயில் நிலையம், ஆச்சார்யா இன்ஸ்டிடியூட், தோடதகுட்டதஹள்ளி, தம்மேனஹள்ளி பகுதிகளுக்கு இயங்கும்.

எம்எப் - 50 எண்: இப்பஸ், சிக்கபிதரகல்லு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, தோடதகுட்டதஹள்ளி, குதுரேகெரே காலனி, மாதநாயகன ஹள்ளி பாதையில், இரண்டு பஸ்கள் இயக்கப்படும்.

எம்எப் - 51 எண் கொண்ட பஸ், மாதவாரா மெட்ரோ நிலையம், கடபகெரே கிராஸ், லட்சுமி புரா, வட்டரஹள்ளி, ஜனப்பிரியா டவுன் ஷிப் வழித்தடத்தில், இரண்டு பஸ்கள் இயக்கப்படும்.

எம்எப் 52 எண்: இப்பஸ், மாதவாரா மெட்ரோ ரயில் நிலையம், தாவரகெரே, லட்சுமிபுரா, கங்கொண்டனஹள்ளி கிராஸ், கித்தனஹள்ளி, மல்லசந்திரா, வர்த்துார் வழித்தடத்தில் இரண்டு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us