ADDED : ஜன 23, 2025 12:27 AM

பி.எம்.டபிள்யூ., நிறுவனம், 10க்கும் மேற்பட்ட வாகனங்களை காட்சிப்படுத்தி அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, 'எக்ஸ் - 3' மற்றும் 'ஐ - எக்ஸ் 1' இரு கார்களையும், எஸ் 1000 ஆர்.ஆர்., மற்றும் ஆர் 1300 ஜி.எஸ்.ஏ., இரு பைக்குகளையும் காட்சிப்படுத்தியது.
எக்ஸ் - 3: இந்த கார், மேம்படுத்தப்பட்டு நான்காம் தலைமுறையில் வந்துள்ளது. இது, 'மைல்டு ஹைபிரிட்' பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு வகையிலும் வருகிறது.
மேம்படுத்தப்பட்ட வெளிப்புற மற்றும் உட்புற டிசைன், ஒளிரும் முன்புற கிரில் ஆகியவை இதன் புதிய மாற்றங்கள். இதன் விலை, 75.80 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.
ஐ.எக்ஸ்., - 1 லாங் வீல் பேஸ்: இது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முதல் பி.எம்.டபிள்யூ., மின்சார கார். சாதாரண ஐ.எக்ஸ்., - 1 காரை விட, 112 எம்.எம்., அதிக நீளம் கொண்டது. இதில், 66.4 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட பேட்டரி உள்ளது. ஒரு சார்ஜில், 531 கி.மீ., வரை செல்ல முடியும். இதன் விலை, 49 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எஸ் 1000 ஆர்.ஆர்.,: இந்த ஸ்போர்ட்ஸ் பைக் மேம்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்ஜின் உட்பட இதர உதிரிபாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன் விலை, 45,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 21.20 லட்சம் ரூபாயாக உள்ளது.
ஆர் 1300 ஜி.எஸ்.ஏ.,: இந்த பைக் மேம்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய பைக்கை ஒப்பிடுகையில், இதில் 30 லிட்டர் பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டதால், எடை 32 கிலோ அதிகரித்து, 269 கிலோவாக உள்ளது.
மேலும், அடாஸ் மற்றும் ஆப்ரோட் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் விலை, 45,000 அதிகரிக்கப்பட்டு, 22.95 லட்சம் ரூபாயாக உள்ளது.
வாகன கண்காட்சியில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பி.எம்.டபிள்யூ., வாகனங்களின் முன்பதிவுகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், வினியோகம் ஏப்ரல் முதல் துவக்கம்.