UPDATED : டிச 18, 2024 10:41 PM
ADDED : டிச 18, 2024 06:35 PM

மும்பை: மும்பை அருகே, 100க்கும் மேற்பட்டோருடன் கடலில் சென்ற படகு, இன்னொரு படகு மோதியதில் கடலில் மூழ்கியது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது.
மும்பையில் இருந்து சுற்றுலாப்பயணிகள் விரும்பும் எலிபென்டா தீவுக்கு நீல் கமல் என்ற படகு இன்று மாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்தது. 100க்கும் மேற்பட்டோர் படகில் இருந்தனர். அப்போது அந்த படகின் மீது அதிவேகப்படகு மோதியது.இதில், சுற்றுலாப்பயணிகள் சென்ற படகு மூழ்க ஆரம்பித்தது. படகு ஊழியர்கள், அவசர உதவி கோரி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு கடற்படை கப்பல் மற்றும் கடலோர காவல் படையின் சுபத்ரா குமாரி சவுகான் படகு ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இதில், 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது என்று மாநில முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.