ADDED : ஏப் 09, 2025 11:06 PM
ஆக்ரா:போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அந்த வீட்டில் வசித்த ஷபினா,40, அவரது மகள் இனயா,9, ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் ஒரு போர்வையில் சுற்றப்பட்டுக் கிடந்தன. இரு உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
லோஹமண்டி போலீஸ் உதவிக் கமிஷனர் மயங்க் திவாரி,“தலைமறைவாக உள்ள ஷபினா கணவர் ரஷீத்தை தேடி வருகிறோம். ரஷீத் தன் மனைவி மற்றும் வளர்ப்பு மகளை கொலை செய்து விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரஷீத் ஏற்கனவே திருமணமான நிலையில் இரண்டாவதாக ஷபினாவை மணந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது,”என்றார்.