ADDED : பிப் 27, 2024 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீரட்:உத்தர பிரதேசத்தில், டயர் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உ.பி., மாநிலம் மீரட் அருகே பிட்காரி கிராமத்தில் அமைந்துள்ள டயர் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பாய்லர் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், சங்கர்,30, பிரவின்,22 ஆகிய இரு தொழிலாளர்கள் உடல் சிதறி அதே இடத்தில் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மூன்று தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் பயன்படுத்திய டயர்களை மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதிக அழுத்தம் காரணமாக பாய்லர் வெடித்ததாக தெரிய வந்துள்ளது.

