தைரியமான அரசியல்வாதி : ராகுலை புகழும் பாலிவுட் நடிகர்
தைரியமான அரசியல்வாதி : ராகுலை புகழும் பாலிவுட் நடிகர்
UPDATED : செப் 27, 2024 10:37 PM
ADDED : செப் 27, 2024 10:33 PM

மும்பை: '' எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தன் மீதான விமர்சனங்களை முறையாக கையாளத் தெரிந்த தைரியமான அரசியல்வாதி, '' என பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் கூறியுள்ளார்.
டில்லியில் ஆங்கில மீடியா சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சயீப் அலி கானிடம் , எதிர்காலத்தில் இந்தியாவை வழிநடத்தி செல்லும் தைரியமான அரசியல்வாதி யாரை கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சயீப் அலி கான் அளித்த பதில்: அனைவரும் தைரியமான அரசியல்வாதிகள் தான். ராகுல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அவர் செய்வதையும், சொல்வதையும் சிலர் அவமதித்து பேசினர். ஆனால், அதனை மாற்றும் வகையில் கடுமையாக உழைத்துள்ளார் என நான் நினைக்கிறேன்.
அரசியலில் நுழையும் எண்ணம் எனக்கு இல்லை. இந்தியாவில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

