காஷ்மீர் சந்தையில் குண்டு வீச்சு; பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்
காஷ்மீர் சந்தையில் குண்டு வீச்சு; பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்
ADDED : நவ 03, 2024 04:17 PM

ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் காயமடைந்தனர். இந்த பரபரப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு, ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் நடந்துள்ளது. அருகே சுற்றுலா வரவேற்பு மையம் உள்ளது. இன்று ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் சந்தைக்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. அப்போது தான் குண்டுவீச்சு சம்பவம் நடந்திருக்கிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று ஸ்ரீநகரில் லஷ்கர்-இ- தொய்பாவின் உயர்மட்ட பாகிஸ்தான் கமாண்டர் உள்ளிட்ட இருவரை நேற்று நமது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் கையெறி குண்டு வீசி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.